இண்டி கூட்டணிக்கு தலைவர் என்று ஒருவர் இல்லை எனவும், எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையும் அவர்களிடம் இல்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26-ம் தேதி மற்றும் மே 7 -ம் தேதிகளில் வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பெங்களூரு மற்றும் சிக்கபல்லாபூரில் பிரதமர் மோடி, ரோட்ஷோ மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள், என்னையும், நாட்டு மக்களையும் தவறாக விமர்சனம் செய்வதிலேயே தங்களது நேரத்தை வீணடித்து வருகின்றனர்.
மக்களுக்கு தேவையான வசதிகள், முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை எனக் கூறினார். ஆனால், பாஜக 24 மணி நேரமும் மக்களைப் பற்றியும், இந்த நாட்டைப் பற்றியுமே சிந்தித்து, செயலாற்றி வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில், நீங்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை அளித்தீர்கள் அதன் மூலம் வலிமையான அரசு உருவானது. அது நாட்டை பலப்படுத்தியது, எனக் கூறிய பிரதமர் மோடி, அதுபோலவே வரும் தேர்தலிலும் நீங்கள் பாஜக வெற்றி பெற ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.