உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வு நேற்று முன்தினமும், நேற்றிரவு திக் விஜயமும் நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.