தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வியாபாரி பாலத்திற்கு அடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூசாலிபட்டி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லையென உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
இந்த நிலையில், ஊர்க்காவல்சாமி கோவில் அருகே உள்ள பாலத்திற்கு அடியில் அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.