தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கெஞ்சயன்குளம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வண்ணத்துறை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரேம் குமார் நீரில் மாயமானர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தீயணைப்புத்திறையினர் 8 மணி நேரமாக தேடி பிரேம் குமாரை சடலமாக மீட்டனர்.