கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பறவை காய்ச்சலின் எதிரொலியாக, கேரளாவிலிருந்து கோழி, வாத்து உள்ளிட்டவற்றை நீலகிரிக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் உள்ள கக்கநள்ளா, நாடுகாணி உள்ளிட்ட 8 தமிழக மாநில எல்லை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.