கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இங்கு அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அவற்றை ஆய்வு செய்தபோது எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.