கர்நாடகாவில் கல்லூரி மாணவி கொலையை கண்டித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் ஹுப்லியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹைமாத் மகள் நேஹா ஹைமாத். இவர் அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவரை ஃபயாஸ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலை நேஹா ஹைமாத் நிராகரித்துவிட்டார். இதனால், ஆவேசமடைந்த ஃபயாஸ், நேஹா ஹைமாத்தை கத்தியால் குத்தியதில் மரணம் அடைந்தார். இந்த நிகழ்வு மாநிலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில் இன்று கல்லூரி மாணவி கொலைக்கு நீதி கேட்டு கர்நாடகாவில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.