வசந்த உற்சவத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க தேராட்டம் விமரிசையாக நடைபெற்றது.
ஆந்திரமாநிலம், திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் 2-ம் நாளுக்கான மலையப்ப சுவாமியின் தங்க தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் சமேத தாயார்களுக்கு தீப, தூப, நெய் வைத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.