ஒரு மாஸான படத்தோட கதை கேட்கும் போது அந்த ஹீரோ entry எப்படி இருக்கும்?
ஒரு பெரிய மார்கெட், பரபரப்பான சூழ்நிலை, திடீர்னு ஒரு சம்பவம், வில்லனோட ஆளுங்க எல்லாம் அங்கேயும் இங்கேயும் ஓடுவாங்க…
Sudden ah ஒரு ஹீரோ entry… கைய முறுக்கி, காலர தூக்கி, shoulder எல்லாம் விரிச்சு, நெஞ்ச பொடச்சுகிட்டு நடந்து வருவார்…
இத தான் goosebumps நு நெனச்சு இன்னிக்கும் படம் பாத்துட்டு இருக்காங்க… இது ரீல் தான்….
ஆனா ரியாலிட்டில இருக்கிற இன்னொரு சம்பவம் பாத்திருக்கிங்களா? பாக்காம எப்படி?
கிரவுண்ட் முழுக்க பெரிய கூட்டம், ஆர்ப்பரிக்கிற அளவுல சத்தம், ஒரு விக்கெட் விழுந்த நிமிஷமே கையில கட்டியிருக்கிற ஸ்மார்ட் வாட்ச், உங்க காது ஜவ்வு கிழிய போகுதுனு உங்கள எச்சரிக்கும்… அந்த ஒரு நிமிஷம் ஒரு முழு மனுஷன், பெரிய மனுஷன், மஞ்ச கலர் ஜெர்சியோட கிரவுண்டுக்குள்ள நடந்து வருவாரு….
90s kids-க்கு எல்லாம் சின்னதுல பாத்த அதே பங்க் ஹேர்ஸ்டைலோட அவங்களோட ஐடல்… 2 k kids க்கு எல்லாம் யாருய்யா இந்த மனுஷன், இந்த வயசுல இப்படி ஆடுறாரு அப்படிங்கிற ஒரு இன்ஸ்பிரேஷன்….
கிரவுண்ட்ல கூடியிருக்கிற மொத்த கூட்டத்தில அத்தனை பேரும் அவர் ஒருத்தர் பேர முதுகுல சுமந்துட்டு, அவருக்காக உக்காந்திருப்பார்….
தல தோனியோடா தரிசனத்துக்காக காத்துகிட்டு இருந்த ஒட்டுமொத்த கூட்டதுக்குமே, இந்த சீசன்ல நடந்த எல்லா போட்டிகளிலும் தீனி போட்டிருக்காரு தோனி…. இந்த சீஸன்ல சி எஸ் கே வுக்கு கேப்டனா இல்லாட்டியும், தன்னோட முழு பங்களிப்பை தாறுமாறா குடுத்து ரசிகர்களை உற்சாகத்தில திணற வச்சிட்டு இருக்காரு தல தோனி..
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரா தோனி பேட்டிங் செஞ்ச முதல் போட்டி ஒரு இக்காட்டான சூழலா இருந்தாலும், களத்தில நின்ன தோனி 16 பந்துகள் மட்டுமே பிடிச்சு 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள்னு 37 ரன்கள் விளாசி கடைசி வர போராடினாரு…
அந்த போட்டியில சென்னை தோல்விய தழுவினாலும், ரசிகர்களுக்கு தோனி தரிசனம் ஒரு கொண்டாட்டம் தான்…
அடுத்தடுத்து இறங்கின போட்டிகள்ல தோனிக்கான வாய்ப்பு இல்லாட்டியும், சென்னை அணிக்கு பரம எதிரியா பார்க்கப்படக்கூடிய மும்பை இந்தியன்ஸ, அவங்க கோட்டையான வாங்கடேவுல faceoff பண்ணினப்போ….
கடைசி ஓவர்ல களத்துக்கு வந்த தோனி ஃபேஸ் பண்ணினது என்னவோ 4 பந்துகள் தான்… ஆனா அந்த நாலு பந்துகள் ல அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்சர்கள விளாசி விண்டேஜ் தோனி இஸ் பேக் அப்படின்னு சொல்லாம சொன்னாரு….
ஆட்டம் ஜெயிப்போமோ, தோற்போமோ அப்படின்கிறது தாண்டி, தோனி தரிசனம் பாத்துட்டா போதும்னு நெனச்சிட்டு இருந்த தோனி ரசிகர்கள், ஒவ்வொரு போட்டிக்கும் once more கேட்கிறாங்க… அதே ஸ்டைலோட, அதே பவரோட, அதே அமைதியான சிங்கம், தன் காட்டுல தான் தான் ராஜானு திரும்ப வந்திருக்கிறத பாக்க ரசிகர்கள் மத்தியில இன்னும் excitement கூடியிருக்கு….
அதே போல தான் லக்னோவுக்கு எதிரான போட்டியில பேட்டிங் செய்ய வந்த தோனி, 9 பந்துகள்ல 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள அடிச்சு 28 ரன்கள் விளாசினாரு… தல தரிசனத்தை பார்க்க வந்த கூட்டம் ஒவ்வொரு போட்டியப்பவும் உற்சாகத்தோட கத்திற அந்த சத்தம், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரே ரசல் அப்படின்னு எல்லாரையும் ஆச்சரிய படுத்தினதா சொல்லி இருக்காங்க…
இந்த சீசன் ல மட்டும் எம் எஸ் தோனி களமிறங்கி பேட்டிங் செஞ்ச 5 இன்னிங்ஸ்கள்லையும் நாட் அவுட் பேட்ஸ்மேன் ஆ தான் இருந்திருக்காரு….
ஒட்டுமொத்தமா நடப்பு சீசன்ல மட்டும் 34 பந்துகள் பிடிச்சு, 87 ரன்கள் விளாசி இருக்கிறார் தோனி… அடுத்து என்ன செய்ய போறாரு அப்படின்னு நெனச்சுட்டு இருக்கும் போது, தோனி ரசிகர்கள் அடிச்சு பிடிச்சு, சென்னையில நடக்க இருக்கிற லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில அவர பாத்திடனும்னு ஆவலோட இருக்காங்க…
அதே போல லக்னோவுக்கு எதிரான முந்தைய போட்டியில சென்னை அணி தோல்விய தழுவினதால, சென்னையில அதே லக்னோ அணிக்கு பதில் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்க படுது.. மஞ்சள் படையும், தல entry காக காத்துகிட்டு இருக்கு……