மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்க்கு டீ போட்டு கொடுத்து உலக அளவில் ஒரே நாளில் பிரபலமான டாலி சாய் வாலா சுனில் பாட்டீல், தற்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அது என்ன வீடியோ? என்பதை பற்றி பார்க்கலாம்.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ஜாக் ஸ்பரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் போல தோற்றம் கொண்ட ஒருவர் தான் சுனில் பாட்டீல். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் டீக் கடை வைத்திருக்கிறார் .
இவர் அணிந்திருக்கும் உடையிலும் சரி, டீயைப் போடுவதிலும் சரி, போட்ட டீயை ஆற்றுவதிலும் சரி, ஆற்றிய டீயை வாடிக்கையாளர் கையில் கொடுப்பதிலும் சரி , எல்லாமே புது பாணி எல்லாமே புது ஸ்டைல் ! அயர்ச்சி நீங்கி உற்சாகம் வர இவரது டீக் கடைக்கு டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், இவரின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் பார்த்து வியந்து போவார்கள். அந்தளவுக்கு ஒரு வேகம் ஒரு லாவகம் ஒரு வசீகரம் . அதனாலேயே சுனில் பாட்டீலின் ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலம் .
சுறுசுறுப்பாக இருந்தாலே அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்பார்கள் அது சுனில் பாட்டீல் வாழ்வில் உண்மையாயிற்று. கடந்த பிப்ரவரி 28ம் தேதி பில் கேட்ஸ் தமது இன்ஸ்டா பக்கத்தில் ‘இந்தியாவில், நீங்கள் எங்கு திரும்பினாலும் புதுமைகளைக் காணலாம் – டீ போடுவதில் கூட !என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
டீக் கடைக்கு செல்லும் பில் கேட்ஸ், ஒரு டீ கொடுங்கள் என ஆங்கிலத்தில் கேட்கிறார். உடனே, சுனில் அவருக்கான ஸ்டைலில் அடுப்பை பற்ற வைத்து, பாலை ஊற்றி, தேவையானவற்றைச் சேர்த்து சூடாக ஒரு டீயைப் போட்டு கொடுக்கிறார். .
சுனில் போட்டு தந்த டீயை பில் கேட்ஸ் குடிக்கிறார் . இந்த வீடியோவுக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்ததளு்ள நிலையில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் LIKE செய்துள்ளனர். பல்லாயிரக்கணக்காணோர் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் டாலி சாய் வாலா என்று செல்லமாக அழைக்கப்படும் சுனில் பாட்டீல் . பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்படும் நபராக மாறியுள்ளார்.
இவர் தான் இப்போது துபாயில் புர்ஜ் கலீஜாவின் கடைசி மாடியில் உள்ள அரங்கில் காபி அருந்தும் தருணத்தை ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார். மிக வேகமாக வைரலாகி வரும் இதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள் …
அதிர்ஷடம் எப்படியும் வரும்… ஆனா யாருக்கு எப்ப வரும்ங்கிறது தான் இரகசியம்