கடலூர் மாவட்டம், வதிஷ்டபுரத்தில் ஏரியின் அருகே காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வதிஷ்டபுரத்தில் உள்ள ஏரியின் அருகே மர்ம நபர்கள் சிலர் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டிச் சென்றுள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மருந்து, மாத்திரைகளை கொட்டிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.