ஊழல் வழக்குகள் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குற்றவியல் சட்ட குழுவில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அங்கம் வகித்ததாகவும், அவர் பல முறை நேர்மறையான ஆலோசனைகளை வழங்கி பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
ஊழல் வழக்குகள் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், நீதி நிலுவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாகவும் அமித் ஷா சாடினார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாஜக வின் நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை , முடிவுகளை எடுக்கப்போவதும் இல்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையும் பறிக்காது என்றும், மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய காங்கிரஸ் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தில் காங்கிரஸ் குறைபாடு காண்பதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.