இஸ்ரேல் ராணுவ உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக ஹலிவா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையில் சுமார் 32 ஆயிரம் உயிரிழந்துள்ளனர்.