தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா,ஒடிசா, பீகார், உத்தர பிரதேஷ், மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும், மேற்கு வங்கத்தில் அதிகளவு வெப்பநிலை வீச வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.04.2024 முதல் 25.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
26.04.2024 முதல் 29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
23.04.2024 & 24.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.