விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? - ராமதாஸ் கேள்வி
Oct 17, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? – ராமதாஸ் கேள்வி

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு: மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் மளிகைப்பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளன.

மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதந்திர செலவு ரூ.2000 வரை உயர்ந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அவற்றின் தட்டுப்பாடு ஒரு காரணம் என்றால், அப்பொருட்களின் பதுக்கலை தடுக்கத்தவறிய தமிழக அரசின் அலட்சியம் இன்னொரு காரணமாகும். அந்த வகையில் விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான்ன பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இப்போது மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்னெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா? என்பது தெரியவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும்.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tags: What is Tamil Nadu government going to do about price rise? - Ramadoss Question
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Next Post

ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies