உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி - சிறப்பு தொகுப்பு!
Oct 2, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முக்கிய போராட்டங்கள் என்றால் அவை உப்பு சத்யாகிரகமும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் தாம். இதில் பங்கேற்ற முக்கியமான சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பற்றிய நினைவலைகளை பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசின் உப்பு வரி மற்றும் ஏகபோக உரிமையை எதிர்த்து, 1930ம் ஆண்டு மார்ச் 12-ல் மகாத்மா காந்தி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி தண்டி வரை 241 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டு உப்புச் சட்டத்தை மீறும் போராட்டத்தை முன்னெடுத்தார்.

முன்னதாக தமிழகத்தில் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த ருக்மிணி லட்சுமிபதியின் தாத்தா ராஜா டி. ராம்ராவ் பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற ருக்மணி, 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். பிறகு 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

1930ல் வேதாரண்யத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன் மூலம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ருக்மணி 1937லும் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 1947ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை சென்னை மாகாணத்தில் அப்போதைய முதலமைச்சர் பிரகாசத்தின் அமைச்சரவையில் பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம் சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் மற்றும் ஒரே பெண் அமைச்சர் என்ற சாதனையையும் செய்தார்.

சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று பெயர் சூட்டியும் 1997ல் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டும் அரசு ருக்மணி லட்சுமிபதியைக் கவுரவப் பட்டுள்ளார்.

உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைசென்ற முதல் பெண் அரசியல் கைதியாகவும், சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சராகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்த சுதந்திர போராட்டத் தியாகியான ருக்மணி லட்சுமிபதி இந்த 80வது சுதந்திர நாளில் போற்றி மகிழ்வோம்.

Tags: Salt SatyagrahaRukmini LakshmipathiQuit india movementIndependence Day celebrationIndependence Day celebrationsindia independence day celebrationindia independence day celebrationsindia at 80 celebration80th independence day celebration liveindia 80th independence day
Share
Tweet
SendShare
Previous Post

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

Next Post

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies