இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், இடைத்தேர்தலுக்கு காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடந்த தேர்தலில் 5, 6 இடங்களில் மட்டுமே விஜய் பரப்புரை மேற்கொண்டதாகவும், ஆனால் “இன்று 39 இடங்களில் பேசவுள்ளார் என்றால் அது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி என கூறினார்.
இடைத்தேர்தலுக்குப் பின்னர் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் நயினார் குறிப்பிட்டார்.
















