ஃப்ளைதுபாய் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தாக்குதலைத் தடுத்து, 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ என்றும் அவரது துணிச்சல் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது என்றும் பாராட்டி உள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது எனவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல்டி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார்-க்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஃப்ளைதுபாய் விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது. ஆபத்தான நேரத்தில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை 170-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாக ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பிரசாரத் தலைவர் சுனில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
விமானி ஸ்மித் மச்சார் உண்மையான ஹீரோ என்றும், அவரது துணிச்சலை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்வதாகவும் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















