சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் கோவை, சென்னையை தொடர்ந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது.
சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் மற்றும் திண்டுக்கல் ஜி.டி.என். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘அக்ரி ஸ்டார்ட் அப்’ திருவிழா, திண்டுக்கல்லில் வரும் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, “விவசாயத்தைத் தொழிலாக்குவோம், தொழிலை அடையாளமாக்குவோம்” என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடத்தப்படுவதாகவும், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்முனைவோர்கள் என அனைவருக்கும் பங்கேற்கலாம் எனவும் கூறினார்.
மேலும், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட வேளாண் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளதாகவும், இயற்கை விவசாய விளைபொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி INSTAGRAM, X, YOUTUBE போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.















