இந்தியாவின் GST வசூல், தொடர்ந்து மூன்றாவது மாதமாக 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மொத்த GST வசூல் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தைவிட 14 புள்ளி 7 சதவீதம் அதிகமாகும். ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த GST வசூல், ஆகஸ்டில் 2 லட்சம் கோடி ரூபாயாகவும், செப்டம்பரில் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இறக்குமதி மீதான GST, செப்டம்பர் மாத வசூல் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
இறக்குமதி வரி வசூல் 25 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து, 65 ஆயிரத்து 525 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
















