தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 1, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 1, 2026, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புதிய ஆட்சி, சிறந்த நிர்வாகம் என வாய்ஜாலம் காட்டிய தவெக
அரசால், மின் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியவில்லை. முன்கூட்டிய திட்டமிடல் துளியும் இன்றி, தமிழகத்தைத் தொழில் முடக்கத்திற்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கும் தள்ளிவிட்டதே விஜய் அரசின் நிர்வாகத் தோல்விக்கு அப்பட்டமான சான்றாகும்.

மின்சார வாரியத்தின் மின்சாரம் யூனிட்டுக்கு ₹7 ஆக உள்ள நிலையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ₹16 முதல் ₹30 வரை உயர்ந்து, தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கியத் தொழில் நகரங்களில் இயங்கும் வார்ப்பகங்கள் மற்றும் பஞ்சாலைகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழில்முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது. எனவே, தவெக அரசு மெத்தனப் போக்கைக் கைவிட்டு, மாற்று வழிகளில் மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து, தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: nainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran plannainar nagendran livenainar nagendran controversyindustrial units own generators issueNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
Share
Tweet
SendShare
Previous Post

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

Related News

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies