பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!
Oct 2, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விடுதலைக்குத் தமிழகம் ஆற்றிய பங்கு அளப்பரியது. குறிப்பாக மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட வரலாறுகள் நிறைய நிறைய உள்ளன. மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் என்ற வரிசையில் இப்படி அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார்- பங்கஜத்தம்மாள் தம்பதியினருக்கு முக்கிய இடமுண்டு. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறமையும் இருந்தது. சிறுவயது முதல் தானே பாடல்களை இயற்றி இசையமைத்து பாடிவந்தார். தேசப் பற்று மிக்க ஸ்ரீநிவாச ஆழ்வார் எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்தன.

1919-ல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை இவரை வெகுவாக பாதித்தது. பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் நடத்திய இந்தக் கொடூரமான ஆதிக்க செயலால் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியானார்கள்.

இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும் படியாகப் பாடி மக்கள் மத்தியில் மத்தியில் விடுதலை உணர்வைத் தூண்டினார். கணவருடன் சேர்ந்து தேசப் பற்றுப் பாடல்களைப் பாடி பங்கஜத்தம்மாவும் தேசிய உணர்வை ஏற்படுத்தினார்.

1930-ல் தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் மூதறிஞர் ராஜாஜி மேற்கொண்ட உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரைக்குச் சென்ற தொண்டர்களில் ஸ்ரீநிவாச ஆழ்வாரும் ஒருவர்.

தேச விடுதலைக்காக அந்த யாத்திரை வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி ஓராண்டு திருச்சி சிறையில் அடைப்பட்டு கிடந்தார்.

தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்த ஸ்ரீநிவாச ஆழ்வார் சுதந்திர உதயத்தைக் காணாமலே 1937-ல் மரணமடைந்தார்.

7 வயதில் ஸ்ரீநிவாச ஆழ்வாரைத் திருமணம் செய்த பங்கஜத்தம்மாளும் தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாக சென்று தேச விடுதலைக்குப் பாடு பட்டுள்ளார்.

மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் இந்த தேசிய பஜனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது.

தேசப் பஜனை பாடுவது மட்டுமல்லாமல் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வந்த பங்கஜத்தம்மாள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக . இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார்.

கணவரும் இறந்த பின்னும் விடுதலைக்குப் பாடுபட்ட பங்கஜத்தம்மாள் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், மேலாதிக்கச் சுரண்டல் போன்ற கொடுமைகளை அனுபவிப்பது கண்டு சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார்.

சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்து போராடினார். உண்மையிலேயே பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

Tags: 80th independence day celebration liveindia 80th independence dayPankajathammalfreedom movement.Independence Day celebrationIndependence Day celebrationsindia independence day celebrationindia independence day celebrationsindia at 80 celebration
Share
Tweet
SendShare
Previous Post

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

Next Post

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies