ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் மரியவில்சன் நேரில் வரவேற்பு அளித்தார்..
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர். இந்நிலையில் வித்யா ராம்ராஜ், கமலினி, பரணிகா, அபிநயா, விஷால் தென்னரசு, ஹரிஹரன் ஆகியோர் ஜப்பானில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்திற்கே நேரில் சென்று நிதியமைச்சர் மரிய வில்சன் வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து பேட்டியளித்த வீரர், வீராங்கனைகள், தமிழக அரசு தங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது எனவும் அதனால் வெற்றி பெற முடிந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேட்டியளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், அமைச்சராக இல்லாமல் விளையாட்டு வீரராகவே வந்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் எனவும் தமிழகமே மிகவும் சந்தோஷமாக உள்ளது எனவும் கூறினார்.
















