தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்
Oct 2, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

Manikandan by Manikandan
Aug 15, 2026, 10:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மிகுந்த தேசப்பற்றின் காரணமாக ராணுவப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுமார் 4 ஆயிரம் குடும்பங்களும் மிகுதியான தேசப்பற்றை கொண்டுள்ளன.

1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் மூலம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமம், அதீத தேசப்பற்றை கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதற்கு சாட்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு நான்கு தலைமுறையாக வீரர்களை அனுப்பி வருகிறது கம்மாவான்பேட்டை.

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிப் பெற்ற நிலையில், 1972-ஆம் ஆண்டு கம்மவான்பேட்டை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக அப்போதைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா வருகை தந்திருந்தார். அப்போது, கம்மவான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், சீருடையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மிகவும் சிறிய கிராமத்தில் இவ்வளவு ராணுவ வீரர்களா என்று திகைத்துப்போனார் ஆளுநர். கம்மவான்பேட்டை கிராமத்தை இனிமேல் ராணுவப்பேட்டை என்று தான் அழைக்கவேண்டும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அதைத்தொடர்ந்து கம்மவான்பேட்டை கிராமத்திற்கு ராணுவப்பேட்டை என்ற புனைப்பெயரை பொதுமக்கள் சூட்டினர். அரசு ஆவணங்களில் கம்மவான்பேட்டை என இருந்தாலும், பொதுமக்கள் பேச்சுவழக்கில் ராணுவப்பேட்டை என்றே அழைத்து வருகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளனர். ராணுவப்பேட்டையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சுமார் 3 ஆயிரம் வீரர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன், பேரன் என ஏற்கனவே நான்கு தலைமுறையினர் ராணுவத்திற்கு சென்றாலும், காலம் மாறினாலும் ராணுவப்பேட்டையின் தேசப்பற்று இன்றளவும் குறையவில்லை. ஐந்தாம், ஆறாம் தலைமுறை இளைஞர்களும் ராணுவத்திற்குதான் செல்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவராவது ராணுவத்தில் இருக்க வேண்டும் என்ற உத்வேகம் இளைஞர்களிடம் காணப்படுகிறது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள், தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

ராணுவப்பேட்டையைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் நாள்தோறும் அர்ப்பணிப்புடன் இராணுவப் பயிற்சிக்காக சில மணி நேரம் செலவிட்டு வருகின்றனர்.

நாட்டிற்காக எல்லையில் காவல்காக்கும் ராணுவவீரர்களை உருவாக்குவதை கடந்து, தேசிய விழாக்களையும் சுதந்திர தினத்தையும் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி தேசப்பற்றை வெளிப்படுத்துவதிலும் ராணுவப்பேட்டை மக்கள் முன்னணியில்தான் உள்ளனர்.

தமிழ்ஜனம் செய்திகளுக்காக வேலூரில் இருந்து செய்தியாளர் சசிகுமார்

 

Tags: independence dayvillagevelurranuvapettai
Share
Tweet
SendShare
Previous Post

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

Next Post

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies