80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!
Oct 2, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மூவண்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில், 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரத்தில் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் சினேகா தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, 93 பயனாளிகளுக்கு 1.52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதே போல், சிவகங்கையில் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சமாதானப் புறாக்கள் மற்றும் மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதனையடுத்து, 8 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நெல்லையில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் ஆனந்த் மோகன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து, 30 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா கொடியை ஏற்றும் நேரத்தில், காவல்துறை அதிகாரி கொடியை அவிழ்த்ததால் பூக்கள் கீழே கொட்டின. இதனால் கொடியேற்றுவதை நிறுத்திய ஆட்சியர், பின்னர் கொடியை விரைவாக ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Tags: india independence day celebrationindia independence day celebrationsindia at 80 celebration80th independence day celebration liveindia 80th independence daytamilnaduDistrict CollectorsIndependence Day celebrationIndependence Day celebrations
Share
Tweet
SendShare
Previous Post

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

Next Post

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies