அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனுமனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த புனித நாள் கொண்டாடப்படுகிறது.
ஈடு இணையற்ற பக்தி மற்றும் ஆழ்ந்த நீதி ஆகியவற்றின் உருவகமாக விளங்குகிறார் அனுமன் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அனுமன் ஜெயந்தியின் இனிய தருணத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனுமன் பெரும் வலிமை, ஆழ்ந்த ஞானம், ஈடு இணையற்ற பக்தி மற்றும் ஆழ்ந்த நீதி ஆகியவற்றின் உருவகமாக விளங்குகிறார். ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்.#அனுமன்ஜெயந்தி pic.twitter.com/bD8snHw57g
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 23, 2024
அனுமன் ஜெயந்தியின் இனிய தருணத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனுமன் பெரும் வலிமை, ஆழ்ந்த ஞானம், ஈடு இணையற்ற பக்தி மற்றும் ஆழ்ந்த நீதி ஆகியவற்றின் உருவகமாக விளங்குகிறார்.
ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.