பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அரசியல் கலாச்சாரம், சிந்தனை உள்ளிட்ட அனைத்தும் மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் நகரில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் பேசிய அவர்,
நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். 2019 ஆம் ஆண்டில், வாக்காளர்கள் எடுத்த முக்கிய முடிவால் நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாக வழிவகுத்ததாக அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அரசியல் கலாச்சாரம், சிந்தனை உள்ளிட்ட அனைத்தும் மாறி விட்டதாக அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாக ராமர் கோயில், 370 வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.