நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.