2024-25ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான ஒருங்கிணைப்புக்குழு நியமனம் செய்துள்ளதாகவும் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்று, அவர்களின் தேர்வு முடிவு மே மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியான 2 வாரங்களில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
எனவும் இதற்கென ஒருங்கிணைப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்படுள்ளது. மேலும் இந்த குழுவின் தலைவராக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், துணை தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.