டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான தேதியை தேர்வாணையம் வெளியிட்டது.
தமிழக அரசு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப் -1, குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9 -ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குரூப்-1 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13 -ஆம் தேதி நடைபெறும்.
குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 28 -ஆம் தேதி நடைபெறும் எனவும் கூறியுள்ளது.