திரைப்படப் பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் என இசையமைப்பாளர் இளையராஜா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்யியுள்ளது.
இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தமக்கு உள்ளது என்பதால், 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த, ‘எக்கோ ரெக்கார்டிங்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரெக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரெக்கார்டிங் நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது,
எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக வாதிட்டார்.
ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது என தெரிவித்தனர்.
வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என்றும், பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு விசாரணையை, ஜூன் இரண்டாவது வாரத்துக்கு, தள்ளி வைத்தனர்.