டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அவருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
அவர் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.