Fair play செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை ஊக்குவித்ததாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் செல் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Fair play செயலியில் சில ஐபிஎல் போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதன் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ள நிறுவனம் புகாரளித்தது.
இது தொடர்பாக, பாடகர் பாதுஷா, நடிகர் சஞ்சய் தத்தின் மேலாளர் உள்ளிட்டோரிடம் மகாராஷ்டிரா சைபர் செல் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், Fair play செயலியில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை ஊக்குவித்தாக எழுந்துள்ள புகாரில், வரும் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.