தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தென்காசியில் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் பழவகைகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள காமராஜர் சந்தையில் எலுமிச்சை பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
அதன் படி எலுமிச்சை ஒரு கிலோ 100 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் தற்போது 140 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.