அரியலூர் பகுதியிலுள்ள அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும், இக்கோயிலில் வழிபட்டால் பயிர்களில் நல்ல முறையில் மகசூல் உண்டாகும் எனவும், ஆடு, மாடு பூரண உடல் நலத்துடன் இருக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். அப்போது பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.