மணிமுத்தாறு நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து குளித்து மகிழ்வது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள சேதம் அடைந்தன.
இதனால் தற்காலிகமாக நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையிலும் அருவியில் குளிப்பதற்கு வனத்துரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.