சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மாத இறுதியில் இருந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த 19-ம் தேதி, தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அதிகபட்ச விலையை எட்டி, ஒரு சவரன் 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது.
பின்னர் நேற்று முன் தினம் சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 710 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து 86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.