மும்பையில் நடைபெற்ற விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய அமிதாப்,
இந்த விருதைப் பெறுவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை என்றும், மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
81 வயதான அமிதாப் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.