மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே லாரியும் காரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நத்தம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சென்னையை சேர்ந்த 3 பேர் காரில் வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மணல் லாரி கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.