காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் மாவடி சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மாவடி சேவையை ஒட்டி, கச்சபேஸ்வரரும், சுந்தராம்பாளும் பச்சை நிற பட்டாடை உடுத்தி, தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினர்.
இந்த மாவடி சேவையானது, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளை வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. வழியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் கச்சபேஸ்வரர் சமேத சுந்தராம்பாளை தரிசனம் செய்தனர்.