நீட் தேர்வு மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக மாநில செயலாளர் மலர்கொடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதையும் மூடி மறைத்து தான் பேசுவார்கள் என்று கூறினார்.
குறிப்பிட்ட சமுதாயத்தையோ அல்லது குறிப்பிட்ட மதத்தையோ பற்றி பிரதமர் மோடி எந்த இடத்திலும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.