திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கிய பேட்டரி வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரி வல வீதிகளில் நடந்து வரும் நிலை இருந்து வந்தது, இந்நிலையில் உடுமலையை சேர்ந்த அகில் என்ற முருக பக்தர், 7லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி கார் ஒன்றை பக்தர்களின் வசதிக்காக நன்கொடையாக வழங்கினார்.
இந்த வாகனத்திற்கு பூஜைகள் நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜசேகரன், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.