தனியார் பள்ளி வாகனங்களின் உறுதி தன்மை குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான வேன் மற்றும் பேருந்துகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார்.
அப்போது வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும், தீ தடுப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பேட்டியளித்த அவர், அதிகளவு மாணவர்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.