சென்னை விம்கோ நகர் அருகே, மாநகரப் பேருந்தில் மதுபோதையில் பயணித்த நபர் உதைத்ததில், முதியவர் ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
வள்ளலார் நகரிலிருந்து எண்ணூர் வரை செல்லும் 56 ஏ மாநகர பேருந்தில், திருவொற்றியூர் எஸ்பி கோயில் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மதுபோதையில் பயணித்துள்ளார்.
அப்போது அவர் பேருந்தில் பயணித்த முதியவரை எட்டி உதைத்ததில், நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மது போதையில் இருந்த பாஸ்கரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.