திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஆருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவியில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம், கோவில் குளத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்வை கண்டுகளித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.