மேற்கு வங்கம் மாநிலம் மால்டாவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒரே நேர் கொள்கையில் பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கம் மாநிலம் மால்டாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட வாகனப் பேரணியும் நடைபெற்றது. பின்னர் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, அவர் பேசிய பிரதமர் மோடி,
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான திமுகவும் மாநிலத்தில் மோதலில் ஈடுபடுவது போல் நாடகம் நடத்துகிறது.
ஆனால் உண்மையில் இந்த இரண்டு கட்சிகளின் குணமும், கொள்கையும் ஒன்றுதான்” என விர்மச்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குடியமர்த்துகிறது என்றும் இதன் மூலம் உங்கள் நிலங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது எனவும் வாக்கு வங்கி அரசியலுக்காக மேற்கு வங்க அரசு தவறான பதையில் செல்கிறது” என்றும் குற்றம் சாட்டினார்.