ஏர் பேக்கிலும் போலி! - சிக்கிய கும்பல்!
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏர் பேக்கிலும் போலி! – சிக்கிய கும்பல்!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானதாக ஏர் பேக்குகள் திகழ்கின்றன. தற்போது அவற்றிலும் போலிகள் வந்து விட்டன இது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

துரதிர்ஷ்டமாக நடக்கும் விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன ஏர் பேக்குகள். மிக மிக எடை குறைவான மெல்லிய துணியால் ஒரு மெத்தை போல வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த காற்றுப்பைகள் வாகனங்களின் எல்லாப் பக்கங்களிலும் நமக்கு பாதுகாப்பை தருகின்றன.

விபத்து நடந்து ஒரு வினாடிக்குளாகவே விரைந்து விரிந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன கூடவே விபத்துகளின் போது ஏற்படும் மோதலால் உண்டாகும் தீவிர தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. இத்தனை முக்கியம் வாய்ந்த விஷயத்தில் போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய டெல்லியில் உள்ள மாதா சுந்தரி சாலையில் விபத்துக்குள்ளான தனது காருக்கு பாதுகாப்பு ஏர்பேக் வாங்க ஒருவர் சென்றுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் விலை உள்ள ஏர்பேக் வெறும் 27,000 ரூபாய்க்கு கிடைத்தது. ஏர் பேக் வாங்க வந்த நபர் ஒரு காவலர் என்பதால் இந்த போலி ஏர்பேக் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

இது தொடர்பாக ரயீஸ், பைசான், ஃபர்கான் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், மத்திய டெல்லியில் , இந்த போலி ஏர் பேக்குகள் தயாரிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புடைய 921 ஏர்பேக்குகள் மீட்கப்பட்டன.

விபத்துக்குள்ளான ஓட்டுநர்களே இந்த போலி ஏர் பேக்குகளின் முதல் தர வாடிக்கையாளர்கள்.
இந்த வகை போலி ஏர் பேக்குகளுக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என்பது தெரியாமலேயே பலரும் மலிவான விலை என்பதால் வாங்கி சென்று இருக்கிறார்கள்.

இந்த போலி ஏர் பேக்குகளை மற்ற மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறார்கள். பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் டெல்லி காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

மலிவாக கிடைக்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கறுப்பு சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது.

Tags: Air bag is also fake The trapped gang
ShareTweetSendShare
Previous Post

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ – எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர்!

Next Post

டிஜிலாக்கர் ஒருங்கிணைப்புடன் இந்திய விமானப்படை டிஜிட்டல் மாற்றத்தை இயக்குகிறது!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies