சென்னை திருவொற்றியூர் அருகே 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களைத் திருடிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜேசிபி ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு குடிநீர் விநியோகம் செய்ய வந்த தமிழ்ச்செல்வன் என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 22-ம் தேதியன்று காணாமல் போனது.
இளைஞர் ஒருவர் அந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் அண்ணமலை நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ரமேஷ் என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் தமிழ்ச்செல்வனின் இரு சக்கர வாகனத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.
அவரிடமிருந்து இருசக்கர வகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.