தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Aug 8, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 02:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் சுதந்திர வாரம் கொண்டாடத் தொடங்கிய நிலையில், தேசப் பிரிவினையால் பஞ்சாப்,சிந்து, வங்காளம்,பலுசிஸ்தான்,காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இந்துக்கள் படுகொலைகள் அரங்கேறின.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காந்தி வருகிறார் என்ற செய்தி வந்தவுடன், கொல்கத்தாவுக்கு வடக்கே உள்ள அமைந்துள்ள ஜோடேபூர் ஆசிரமம் பரபரப்பாக இருந்தது.  ஆசிரமத்துக்கு வந்த காந்தி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி,வங்காளத்தில், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முஸ்லீம்களுக்கு எந்த ஒடுக்கு முறையும் இல்லை என்பதை உறுதி செய்யவே நவகாளிக்குச் செல்லப் போவதாக அறிவித்தார்.

அதே நேரம் மந்திர் மார்க்கில் அமைந்துள்ள இந்து மகாசபா பவனும் பரபரப்பாக இருந்தது.  விநாயக தாமோதர சாவர்க்கர் தலைமையில் இந்து மகா சபையின் மத்தியக் குழுக் கூட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முஸ்லீம்களைத் தாஜா செய்யும் காங்கிரஸ் கொள்கையை எதிர்த்து, காங்கிரசை விட்டு விலகிய பண்டிட் சந்திர சர்மாவும் டாக்டர் கரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து மக்களுக்கும் பிளவுபட்ட இந்துஸ்தானத்தில் சம உரிமை கிடைக்கும் நிலையில்,பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் எனவே, இந்துஸ்தானத்தில் தங்கியிருக்க விரும்பும் முஸ்லீம்களுக்கு சம உரிமை கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டது.

இந்தி மொழி பேசாத மாகாணங்களில்,கல்வி, ஊடகம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளுர் மொழிகளில் இருக்கும் என்றும், தேசிய மொழியாக இந்தி,நிர்வாக மற்றும் நீதி அமைப்பில் ஏற்றுக் கொள்ளப் படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும்,அனைத்து குடி மக்களுக்கும் ராணுவப் பயிற்சி உட்பட பல கோரிக்கைகளும் இக் கூட்டத்தில் வைக்கப் பட்டன.

இதேநேரம் கராச்சியில் தனது பங்களாவில், புதிய இஸ்லாமிய நாட்டுக்கான தேசிய கீதமாக எதை வைப்பது என்ற சிந்தனையில் ஜின்னா இருந்தார். அவருக்கு ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞர் நினைவுக்கு வந்தார்.

லாகூரைச் சேர்ந்த பஞ்சாபி இந்துவான  ஜெகந்நாத் ஆசாத் என்ற கவிஞரை  வரவழைத்து பாகிஸ்தானின் தேசிய கீதத்தை எழுதச் சொன்னார் ஜின்னா.  ஒரு  காஃபிர் எழுதிய ‘தரனா-இ – பாகிஸ்தான்’ அந்நாட்டின் தேசிய கீதமாக முடிவு செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் நிஜாம் உஸ்மான் அலி, தனது பிரம்மாண்ட அரண்மனையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் உதவியை நாடி, திவான் தயாரித்த கடிதத்தில்,உருது மொழியில் கையெழுத்திட்டு ஒரு சிறப்புத் தூதரைக்  கராச்சிக்கு  அனுப்பிவைத்தார்  நிஜாம்.

அமிர்தசரஸ் முழுவதும் வன்முறைகள் கலவரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப் பட்டனர். இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப் பட்டன. பஞ்சாப் மாகாணம் முழுவதும் பத்திரிக்கை தணிக்கை அமல்படுத்தப் பட்டது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். சுதந்திர வாரக் கொண்டாட்டம்  தொடங்கி இருந்தது. மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேரு,படேல் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

அதேநேரம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்ஸின் மஹால் மூத்த பிரச்சாரகர்களும் சங்கத்தின் அலுவலர்களும் கூடியிருந்தனர். பிரிக்கப்படாத பாரதத்தின் வரைப்படம் அவர்களின் முன் இருந்தது. தேசம் பிரிக்கப்படவுள்ளது. பிரிவினை கோட்டுக்கு அப்பால் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும்  எவ்வாறு பத்திரமாக மீட்டு பாரதத்துக்கு அழைத்து வருவது என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

Tags: 76th independance dayதேசப் பிரிவினை கொடூரங்கள்ஆகஸ்ட் 1947The horrors of partition: What happened on 9 August 1947?
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

Next Post

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies