சென்னை தி.நகரில் மேம்பால பணிகள் காரணமாக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகர் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணி தொடங்க உள்ளது.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில், இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் உஸ்மான் சாலை மேம்பாலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.